இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி விழா. ஆண்டு தோறும் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கோவில்களிலும், வீடுகளிலும் வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது கொரோனா காலம் என்பதால் அரசினுடைய விதிமுறைகளின்படி பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து கோவில்களில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் நவராத்திரி விழா தொடங்கியது. ஒன்பது படிகள் வைத்து அதில் கொழு பொம்மைகள் வைக்கப்பபட்டு கொலு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை செய்தனர். இதுகுறித்து, கோயில் பூசாரி சின்னதம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், அசுரர்களை அழித்து தேவர்களை பாதுகாப்பதற்காகவே நடத்தப்படும் இந்த ஐதீக விழா மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான சூத்திரங்கள் வழிபாட்டு முறைகளை உள்ளன இந்த பூஜைகளை செய்யும்போது சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும் என கூறினார்.