
முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளில் சென்று அவர்களுக்காக தர்ப்பணம் செய்து புனித நீராடுவது இந்துக்களின் ஒரு மரபு அந்த வகையிலே ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலாய அமாவாசை ஆகிய நாட்களில் புண்ணிய நீர்நிலைகளில் சென்று முன்னோர்களை நினைத்து வழிபாடுகள் செய்வது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு 16 தீர்த்தங்களைக் கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் புனித நீராடுவதற்காக முன்னோர்களுக்காக புனித நீராடுவதற்காக வெளியூர்களில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு இதுபோன்று தடைகளை விதிக்கும் போது இரண்டு நாட்கள் முன்னதாக அறிவித்தால் தொலை தூரத்திலிருந்து எங்களுடைய பயணத்தை ரத்து செய்து அலைச்சல் இல்லாமல் இருந்திருக்கும் என சுற்றுலாபயணிகள் வேதனை தெரிவித்தனர்.