• Thu. Mar 28th, 2024

நாடு முழுவதும் வைரலாகும் ஒன்றாம் வகுப்பு மாணவியின் கடிதம்..!

Byவிஷா

Aug 2, 2022

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பென்சில், ரப்பர் போன்ற பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக கடிதம் எழுதியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது இந்த கடிதம் நாடு முழுவதும் மிகவும் வைரலாகி வருகிறது.
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினால், பென்சில், ரப்பர், மேகி போன்றவை உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருடகாளுக்கான விலையும் உயர்ந்தது. தற்போது பொன்சில் விலை உயர்ந்துள்ளதை அடுத்து, ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயதுக் குழந்தை கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். உத்திரப் பிரதேசம், கன்னோஜ் மாநிலத்தினைச் சேர்ந்தவர், விஷால் டூபே. வழக்கறிஞரான இவரின் ஆறு வயதுக் குழந்தை, கீர்த்தி டூபே. ஒன்றாம் வகுப்பு படிக்கும் இவர் பள்ளியில் பென்சிலை தொடர்ந்து தவற விட்டுள்ளார். இதனால் தனது அம்மாவிடம், பென்சில் வாங்கித் தரச் சொல்லி கேட்டு தனது அம்மாவிடம் திட்டும் வாங்கியுள்ளார். தனது அம்மா தன்னை கடுமையாக திட்டுவதற்கான காரணம், ஜிஎஸ்டி உயர்வால் பென்சில், ரப்பர் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது தான் என்பதை புரிந்து கொண்ட கீர்த்தி டூபே பிரதமர் மோடிக்கு பென்சில், ரப்பர், மேகி போன்றவற்றின் விலையைக் குறைக்க கோரிக்கை கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்தக் கடித்தத்தில்,
எனது பெயர் கீர்த்தி டூபே. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நீங்கள் ஏற்படுத்தியுள்ள விலைவாசி உயர்வால், பென்சில், ரப்பர் போன்றவைகளின் விலை அதிகரித்துள்ளது. நான் எனது அம்மாவிடம் பென்சில் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டால் அவர் என்னை அடிக்கிறார். எனது பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகள் எனது பென்சிலை திருடிவிடுகிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த மேகியின் விலையையும் அதிகரித்து விட்டீர்கள், இப்போது நான் என்ன செய்ய? என தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியும் உள்ளார். குழந்தை கீர்த்தி டூபே இந்த கடிதத்தினை இந்தி மொழியில் எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் நாடு முழுவதும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடுத்து பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. அந்த வரிசையில் அறிவியல் உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் அதிகரித்துள்ளது. அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் நடைபெற்றதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய பொருட்களின் மீது 5மூ ஜிஎஸ்டி விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஜிஎஸ்டி விகித உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கடிதத்தினை சுட்டிக்காட்டி மக்களவையில், ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்த விவாதத்தின்போது, மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். மற்ற குழந்தைகள் பென்சிலை வாங்க முடியாமல் திருடும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது மத்திய அரசு என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *