• Wed. Dec 11th, 2024

நான்கு மொழிகளில் வெளிவரும் நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’

Byமதி

Oct 20, 2021

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுவரை சொல்லப்படாத கதைக் களத்தை தொட்டுள்ள இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன், உயர் தொழில்நுட்ப தரத்துடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் வெங்கட் பொயனப்பள்ளி தயாரித்துள்ளார்.
இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இதுவாகும்.

சமீபத்தில், இப்படத்தில் நானியின் இரண்டாவது பரிமாணமான வாசுவின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. பெங்காலி பாய் என்ற முதல் பரிமாணத்தைப் போலவே, இதுவும் எல்லா இடங்களில் இருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கான நானியின் இரண்டு தோற்றங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக்கி ஜே மேயர் இசையமைக்க, சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பை கையாள்கிறார்.

திரைப்படம் தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடப்பதால், விளம்பர நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.