• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பிரபாஸின் பிறந்தநாளை கொண்டாடும் ‘ராதே ஷியாம்’ படக்குவினர்…

Byமதி

Oct 20, 2021

பிரபாஸ் தற்போது நடித்துவரும் திரைப்படம் ‘ராதே ஷியாம்’. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். பிரபாஸின் பிறந்தநாளை ஓட்டி படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 அன்று வெளியாகிறது.

பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும்.

அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை இதில் காணலாம். ‘விக்ரமாதித்யா யார்?’ என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது.

பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு போஸ்டர் அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இப்போது பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் ஜனவரி 14, 2022 அன்று இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.