

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேயர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது,அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 11 வது வார்டு அருகுவிளை பகுதியில் ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார், இதில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

