குமரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் 15 கோரிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது.குமரி மாவட்டத்தின் தேவைக்கு மட்டுமே என்ற நிலையில்
நெல்லை மாவட்டத்திலிருந்து, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு தினம் நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளில் கேரளாவிற்கு கடந்த படும் கனிம பொருட்கள் என்பது பத்து சதவீதம் மட்டுமே முறையான அனுமதியோடு செல்லும் நிலையில் 90_சதவீதம் உரிய அனுமதி இன்றி குறிப்பாக இரவு நேரத்தில் வரிசையாக டாரஸ் லாரிகளில் கனிம பொருட்கள் கடத்தப்படுவது காவல்துறையின் எவ்விதமான சோதனையிலும் உட்படாது செல்லுவதை காணமுடிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் கூட்டம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் சாலையில் நின்று கேரளாவிற்கு கனிமங்களை எடுத்து செல்லும் டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது. டாரஸ் ஓட்டுநர்கள் மற்றும் அதே வாகனத்தில் பயணம் செய்வர்களும் சேர்த்துக்கொண்டு சாலையில் லாரியை தடுத்தார்கள். இடையே கை கலப்பால் சம்பந்தபட்ட இடத்திற்கு கனிமம் தடுப்பு வட்டாட்சியர், காவல்துறை எடுத்த நடவடிக்கையில் அனுமதி இன்றி கனிமங்கள் கொண்டு சென்ற வாகனங்களை பறிமுதல் செய்த நிலையில்,
பொது மக்களே சாலையில் நின்று கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனங்களை தடுத்ததை அடுத்து அதிகாரி தொடர் சோதனையில் ஈடுபட்டு அனுமதி இல்லாமல் கனிமம் எடுத்து சென்ற டாரஸ் வாகனங்களை சோதனை இட்டதில். கோட்டார் காவல் நிலையம் முன் பகுதியில் பல நாட்களாக பிடிக்கப்பட்ட வாகனங்கள் கனிமங்கள் உடன் நிற்கும் நிலையில் பகல் நேர கனிமங்கள் கடத்தலை நிறுத்திக் கொண்டவர்கள் இப்போது இரவு நேரத்தில் கனிமங்களுடன் பல டாரஸ் வாகனங்கள் ஊர்வலம் போன்று செல்வதை காண முடிகிறது.
கனிமங்கள் உரிய அனுமதி இன்றி எடுத்து செல்லும் டாரஸ் வாகனங்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டும். இத்தனை டாரஸ் வரிசை பயணத்தை தடுப்பது யார்.?