தாமரைக்குளம் அருகில் சித்தன்க்குடியிருப்பு ஊரில் வைத்து இன்று காலை 51 பசு மாடுகளை வைத்து மெகா கோ பூஜை நடைபெற்றது. இதன் நோக்கம் மழை பெய்ய தாமதம் ஆகி வருவதாலும், மழை வேண்டியும், விவசாயிகளின் நலனுக்காகவும் மாபெரும் கோபூஜை நடைபெற்றது. கோ பூஜையை ஐதீகப்படி பசுக்களுக்கு புல் பூண்டு, கரும்பு, வெல்லம், கீரை மற்றும் அனைத்து பொருட்களும் கொடுத்து, பசுக்களை சந்தோஷ மூட்டி கோபூஜை நடைபெற்றது.
கோ பூஜையில் தலைமை தாங்கி நடத்திய சினிமா இயக்குனர் பி.டி செல்வகுமார் பேசியதாவது..,
பருவமழை வராத காரணத்தினால் மழை வேண்டியும், விவசாயி பெருமக்கள் மழை இல்லாத காரணத்தினால் மிகவும் வேதனையுடன் இருக்கிறார்கள். அவர்களின் வேதனை நீக்கி அவர்களின் வாழ்வில் வளமும், நலமும் பெறவும் இந்த மெகா கோபூஜை நடைபெற்றது மற்றும் நாட்டில் உள்ள மக்களுக்கு அமைதியும், அன்பும், அரவணைப்பும் வேண்டும். குறிப்பாக விவசாயம் மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகளுக்கு அரசு நிவாரண தொகைகளை வழங்கி, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பி.டி. செல்வகுமார் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்வில், குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் பாலகிருஷ்ணன், வர்த்தக அணித்தலைவர் விஸ்வை சந்திரன், அகஸ்திஸ்வரம் ஒன்றிய தலைவர் செந்தில் மோகன், மாநில செயலாளர் ஆனந்த், துணை தலைவர் ஜெபர்சன், சேவியர், ஜெகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 51 பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
