• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள்..,

ByPuthar Pandian P

Mar 16, 2026

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் மதுரை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உள்ள கற்பக விநாயகர் கோவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை ஊழியர்களால் கட்டப்பட்டதாகும்.

இந்த கோவிலில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா, விநாயகர் சதுர்த்தி விழா என பல்வேறு விழாக்கள் இக்கோவிலில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பணத்தை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா ,அன்னதானம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தினம்தோறும் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.பணி மனை ஊழியர்கள் தினம் தோறும் கோவிலில் சாமி கும்பிட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர். இன்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி சக்திவேல் பீடத்தில் வைக்கப்பட்ட உண்டியல் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீடம் உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்து கோவில் நிர்வாகஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வத்தலகுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் பணிமனை ஊழியர்கள் பணியில் செயல்படும் இடத்தில் உண்டியலை திருடிச் சென்ற இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.