
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும் போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கே எனது ஆதரவு என தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியனை சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் முடிவில் ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு மட்டுமே ஆதரவு. ஈரோடு இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து போட்டியிட வேண்டும். அவர்கள் இருவரிடையே நிலவும் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறினார்.
