தொடர்ந்து மக்கள் சேவையாற்றிவரும், ‘என் நாடு என் தேசம் அறக்கட்டளை’சார்பில் குன்றத்தூரில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, பல சேவைகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்..
இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனர் பவித்ரா சிவலிங்கம் கூறுகையில், “தொடர்ந்து மக்கள் சேவையில் பல தொண்டுகள் செய்துவரும் எங்களது அறக்கட்டளை சார்பாக, இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில், குன்றத்தூர் பகுதியில், 1001 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம்! இதன்மூலம், குன்றத்தூரில் சுற்றுப்புறத்தை பசுமையாக வைத்திருக்க முன்மாதிரியாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்!
தொடர்ந்து பேசிய அவர், “மேலும் மகளிர் தினத்தில் சிறப்பாக, அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 15 பெண்களுக்கு விருது வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்!
வேண்டுவோருக்கு உதவிக்கரம் நீட்ட.. 70108 41329, 98845 99763 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்!