• Mon. Sep 9th, 2024

மீண்டும் 1 மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட கொடநாடு வழக்கு ..

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்றது, எலக்ட்ரானிக் எவிடன்ஸ் தொடர்பான செல்போன் பேச்சு விவரங்கள் எடுப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் விசாரனையில் கால அவகாசம் தேவை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சையான், வாளையார் மனோஜ் ஆகியோர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் ஷாஜகான் ஆகியோரும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் விஜயன், முனிரத்தினம், பாலாஜி ஆகியோர் ஆஜராகினர்.

பின்னர் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி சஞ்சய் பாபாவிடம் அரசு தரப்பில் கூடுதல் சாட்சியங்கள் இடையே விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கினை மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், அரசுத் தரப்பில் நடைபெற்றுவரும் புலன்விசாரணை கிட்டத்தட்ட 180 சாட்சியங்கள் இடையே நடைபெற்ற விசாரணையை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறினார். மேலும் எலக்ட்ரானிக் எவிடன்ஸ் செல்போன் பேச்சுகள் தொடர்பான விவரங்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட தொலைத்தொடர்பு அலுவலகங்களில் விவரங்களை சேகரித்து வருவதாகவும், இதில் இருக்கும் சிரமங்களை நீதிபதியிடம் எடுத்துரைத்து அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கனகராஜனின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் நிபந்தனை ஜாமீனில் உள்ள தளர்வுகளை தளர்த்த கோரி எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கில் சாட்சியங்களை மாற்றக்கூடாது, திசை திருப்பக் கூடாது, கலைக்கக் கூடாது, தூண்டி விடக் கூடாது என்பதற்காக நிபந்தனை ஜாமீன் தளர்வுகளை தளர்த்த கூடாது என்றும், ஏற்கனவே தனபால் ரமேஷ் ஆகிய இருவரும் கனகராஜன் செல்போன் தடயங்களை அழித்து சாட்சியங்களை அளித்ததாகவும், இதனால் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என நீதிபதியிடம் அரசுத்தரப்பில் கூறப்பட்டதாக எனக் கூறினார். இதனால் நீதிபதி இந்த மனு மீதான விசாரணை விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *