
பிரபல மாடல் அழகியாகவும் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் மீரா மிதுன். 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி மற்றும் என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட படங்களிலும் மீரா மிதுன் நடித்துள்ளார்.
அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் அதன் மூலம் சர்ச்சைக்கு பிரபலமானார். அதன்பிறகு தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் மீரா மிதுன். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த அவர் கேரளாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மீரா மிதுன் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது ஊடகம் ஒன்றுக்கு கதறி பேட்டியளித்துள்ளார். அதில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணம் அதிகமானதாக கூறியுள்ள மீரா மிதுன், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தனக்கு தற்கொலை எண்ணம் வர காரணம் இந்த சமுதாயம்தான் காரணம். இந்த சமுதாயம் தன்னை வாழ விடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எத்தனை முறை ஜெயிலுக்கு போவது, தற்போது கோர்ட்டுக்கு சென்று கையெழுத்து போடக்கூட தன்னிடம் காசு இல்லை, வழக்கறிஞருக்கு கொடுக்கக்கூட பணம் இல்லை என்றும் கதறியுள்ளார். தன்னை வீட்டில் சேர்த்துகொள்வதில்லை. தனக்கு தங்குவதற்கு வீடு, சாப்பிட சாப்பாடு கூட இல்லை என்றும் கண்ணீர் மல்க மீரா மிதுன் பேட்டி கொடுத்துள்ளார். இந்தியாவுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் பல சாதனைகளை படைத்த தனக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கேட்டுள்ள மீரா மிதுன் தான் இறந்த பிறகு தன் சாதனை வெளியே வரும் என்றும் விரக்தியாக கூறியுள்ளார். தற்கொலைக்கு முயன்ற தன்னை தனது குடும்பத்தினர் காப்பாற்றினர். கடந்த 9 மாதங்களாக கோர்ட், கேஸ், ஜெயில் என அலைந்து கொண்டிருக்கிறேன். தான் எழுந்து நிற்க நிற்க தன்னை அடிப்பதாகவும் கூறியுள்ளார். தான் சந்தித்த பிரச்சனைகளை வேறு யாராவது சந்தித்தால் இவ்வளவு ஸ்ட்ராங்காக இருப்பார்களா என்று தெரியவில்லை என்றும் மீரா மிதுன் கண்ணீர்விட்டுள்ளார்.
