


ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து குரோம்பேட்டை காயிதே மில்லத் நினைவு ஜூம்மா மஸ்ஜீத் சார்பாக 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடுவதற்காக வந்திருந்த இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தொழுகை முடிந்து வெளியே வந்தவுடன் செங்கல்பட்டு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் மத்திய அரசுக்கு எதிராகவும் வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற கூறி மத்திய அரசை கண்டித்து காயிதே மில்லத் நினைவு ஜும்மா மஸ்ஜித் தலைவர் முகமது காசிம் அவர்களின் தலைமையில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் காயிதே மில்லத் நினைவு ஜும்மா மசூதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

