


குமரி மாவட்டத்தில் இன்று, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்.
இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து பள்ளி முற்றத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.


கன்னியாகுமரியில் உள்ள. குத்பா தொழுகை பள்ளி மீராசா ஆண்டவர் பள்ளி வாசலில் வெள்ளிகிழமை தொழுகைக்கு பின்,
மத்திய பாஜக அரசின் இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து துணைபோன ஜி.கே.வாசன், இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் இந்த சட்டத்திற்கு துணைபோன துரோகிகள் என கண்டனம் தெரிவித்தனர்.
பள்ளியில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய மக்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தையும் பொருட் படுத்தாது, சுட்டெரிக்கும் வெயிலிலும் பாஜக அரசின் இஸ்லாமிய எதிர்ப்புப் நிலைக்கு கண்டனம் தெரிவித்தனர். நிகழ்வை ஒருமுகப்படுத்தினார்கள். மாகீன், இப்ராஹிம், சுலைமான், நாசர் ஆகியோர் ஆர்பாட்டம் நடத்தினர்.

