



கன்னியாகுமரி மாவட்டம் திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள குளச்சல் சிங்கன்காவு அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா திருக் கோயில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ஆண்டின் படி ரூ. 9.9 லட்சம் செலவில், திருப்பணிகள் நடந்து, இன்று(ஏப்ரல்_11) நாள் காலை 9.30 மணி அளவில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கலசாபிஷேகம் நடந்தது.

அறங்காவலர் குழு உறுப்பினர் ஜோதீஷ்குமார், மராமத்து பொறியாளர் ஐயப்பன், சூப்பிரண்டு சுப்பிரமணியன், கோயில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார்,குளிச்சல் நகர திமுக செயலாளர் நாகூர் கான், நகர்மன்ற கவுன்சிலர் ஷீலா ஜெயந்தி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கோயில் அர்ச்சகர் கோபால கிருஷ்ணன் போற்றி கலசாபிஷேகம் ஏற்பாடுகள் செய்தார்.


