

இந்தியாவின் மிக பிரபலமான பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவர் பண்டிட் சிவ்குமார் சர்மா. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவர் அடுத்த வாரம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். பத்மபூஷன் விருது பெற்ற ஷிவ்குமார் சர்மா ஜம்மு மற்றும் காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்திய பாரம்பரிய இசையை வாசித்த முதல் இசைக்கலைஞர் ஆவார். இவர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
