• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சில்வர் பெயின்ட் பூசப்பட்ட ஸ்பேனர்களில் தங்கம் கடத்தல்

ByA.Tamilselvan

May 10, 2022

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும் விதவிதமாக தங்கம் கடத்தி வருவது நீடிக்கிறது.
நாட்டில் தங்கம் கடத்தும் மிகப்பெரிய மையமாக சென்னை விமானநிலையம் உருவாகி வருகிறது. இதையடுத்து, தங்க கடத்தல் சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சிலதினங்களுக்கு முன் தலை விக்கில் அடிப்பகுயில் தங்கத்தை கடத்தி வந்து பிடிபட்டனர். இதே போல பல வழிகளில் தங்க கடத்தல் தொடர்கிறது.
இந்நிலையில், 47.56 லட்சம் மதிப்புள்ள 1.02 கிலோ எடையுள்ள சில்வர் பெயின்ட் பூசப்பட்ட ஸ்பேனர்களில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததற்காக ரியாத்தில் இருந்து வந்த பயணி ஒருவரை சென்னை சுங்கத்துறை விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஸ்பேனர்களை பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.