• Fri. Apr 19th, 2024

மக்களுக்காக கொண்டாடிய முண்டாசு
கவிஞரின் பிறந்தநாள் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கி கேக் வெட்டி மக்களுக்காக அறக்கட்டளை சார்பில் தமிழ்வெங்கடேசன் ஏற்பாட்டில் கோலாகல கொண்டாடப்பட்டது. 
முண்டாசு கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 15 ஆண்டுகளாக தமிழ்பணி சமுக பணி செய்துவரும்  தமிழ்வெங்கடேசனின்  மக்களுக்காக அறக்கட்டளை ,நீலகிரி மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் இணைந்து குன்னூர் பகுதியில் செயல்பட்டு வரும் சத்குரு பள்ளியின்  மாணவர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது 
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக குன்னூர் நகர தி.மு.க நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி சிறந்த சமூக ஆர்வலர் உஷா பிராங்கிளின், தொழில் அதிபரும் சமுக சேவகரும் திமுக பிரமுகருமான கோவர்தணன் ஆகியோர் கலந்து கொண்டனர் 
நிகழ்ச்சியில் மாணவர்களின்  கல்விக்கு தேவையான கால்குலேட்டர், பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்களுடன் அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சமையல் எண்ணை, சர்க்கரை, சேமியா, பிஸ்கேட், சோப்பு, பேஸ்ட், ஷாம்பு உள்ளிட்ட 20 பொருட்களுடன்  அனைவருக்கும் ஐஸ்கிரிம் வழங்கப்பட்டது 
விழாவில் பேசிய திமுக நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான இராமசாமி இது போன்ற சமுக பணிகளை அனைவரும் செய்யவேண்டும். இந்த மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என வாழ்த்து தெரிவித்தார் .


 நல்லுள்ளம் அறக்கட்டளையின் நிறுவனர் உலிக்கல் சண்முகம், அரைஸ் அண்ட் சைன் அறக்கட்டளையின் நிறுவனரும் நீலகிரி மாவட்ட தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான ஜாம்பவான் ஜெரால்டு, குன்னூர் நகர திமுக பொருளாளர் ஜெகநாதராவ், கிளை செயலாளர் அல்போன்ஸ்மணி,அப்துல்கலாம் கனவு  அறக்கட்டளை சாதிக்,அப்துல்கலாம் நினைவு அறக்கட்டளை லூயிஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கழக உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட சமூக தன்னார்வலர்களும் செய்தியாளர்களும் இணைந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் சூடி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கோலகலமாக கொண்டாடினர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மக்களுக்காக அறக்கட்டளையின் நிறுவனரும் நீலகிரி மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தினுடைய மாநில துணை தலைவருமான தமிழ் வெங்கடேசன், மக்களுக்காக அறக்கட்டளையின் செயலாளர் சிவப்பிரகாஷ் பொருளாளர் பாஸ்கர்,செய்தியாளர்கள் ராஜா, சரவணன், தினேஷ், நவாஸ், நவின், ராகுல் ,சந்தீப் மற்றும் உள்ளிட்டவர்கள் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *