• Fri. Mar 29th, 2024

அவரக்கண்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள்கோரி கலெக்டரிடம் மனு

அவரக்கண்டி கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இது நாள் வரை செய்து தரவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் பிக்கட்டி பேரூராட்சிக்குட்ப்பட்ட அவரக்கண்டி கிராமத்தில் சுமார் 30 க்கும் மேற்ப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கிராமத்திற்கு இதுநாள் வரை சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, பேருந்து வசதி உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனவும், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்ல சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் எனவும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கவும், பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல 2 கி.மீ தொலைவில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும் எனவும், மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகி வருவதாகவும்.

இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எனவே தங்கள் கிராமத்திற்க்கு தார் சாலை அமைத்து தரவும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அக்கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சி தலைவர் எஸ்.பி அம்ரித்திடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *