கரூரில் தேர்தல் அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வம்பிழுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை தள்ளி வைப்பதாக கூறிவிட்டு தேர்தல் அதிகாரி வெளியே வந்ததால் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்து வாக்குவாதம் செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யட்டனர்.
அப்போது தீடிரென வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி மாரடைப்பால் உயிர்ழந்தார். இது அப்பகுதியை மேலும் பதற்றத்திற்க்கு உள்ளாக்கியது.