• Thu. Mar 28th, 2024

காந்தி சிலை முன்பு எம்.பிக்கள் போராட்டம்!

Byமதி

Nov 30, 2021

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டனர், அவையின் மாண்பைக் குலைத்தனர் என 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட முடிவு செய்தனர்.

இந்தநிலையில், மாநிலங்களவை கூடியதும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறுமாறு சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவிக்கவே, எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்தவர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *