கொரோனா முதல் அலை இரண்டாவது அலை ஆகியவற்றில் நாம் மிகப்பெரிய ஒரு அனுபவத்தை மக்கள் பெற்றுள்ளார்கள். இரண்டாவது அலையின் போது ஆக்சிசன் தட்டுபட்டால் உயிரிழப்புகளை அதிகம் நாம் சந்தித்தோம். எனவே மூன்றாவது அலை வரும் போது எந்தவிதமான மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு இன்றி உயிர்களைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் மருத்துவத்துறையும் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர். அந்த வகையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் போது மருத்துவப் உபகணங்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க புதிய நவீன மருத்துவ உபகரணங்கள் கூடுதலாக வாங்கிக்கொள்ளும் வசதியாக கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் அவர்களின் ஏற்பாட்டின் இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் நிதி உதவி அளிக்க முன் வந்த முதல் கட்டமாக 70 லட்ச ரூபாய் கொரோனா நிதியுதவியை இன்று நாகர்கோவிலில் ஆட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கினார்கள்.
இதுகுறித்து எம்பி விஜய் வசந்த் கூறுகையில், மேலும் பல முன்னணி நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களும் நிதி உதவி தர முன் வந்துள்ளார்கள். முதல் கட்டமாக கன்னியாகுமரி குலசேகரம் உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரனங்கள் வாங்க இந்த நிதி பயன்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல நிறுவனங்கள் நிதி உதவி தர முன் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.