• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டிஅரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா
கல்வி வளர்ச்சி கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு பள்ளிக்குழு தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கச்சைகட்டி பாண்டி காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.வட்டாரத் தலைவர் பால சரவணன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும்இனிப்பு வழங்கினார்.

இதில் மாநில பொதுச் செயலாளர் பொதும்புசெல்வம்,வட்டாரத் தலைவர் அலங்காநல்லூர் ரமேஷ் ஆகியோர் காமராஜர் சிறப்புகள் பற்றி பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் ராஜா செல்வம் நன்றி கூறினார்.