• Sat. Apr 13th, 2024

அன்னை தெரசா மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருள் -முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி

Byதரணி

Aug 26, 2022

அன்னை தெரசா பிறந்த நாள். யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு பிறந்தார். வருந்தும் ஏழை மக்களுக்கு தொண்டு செய்ய இந்தியாவுக்கு வந்தார். ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார். கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது. இந்தியா மட்டுமின்றி 67 உலக நாடுகள் அன்னை தெரசாவின் நினைவாக அஞ்சல் தலைகள் வெளியிட்டுள்ளன.
அவரைப் புகழ்ந்தவர்களிடம், ”கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்’’ என்று புன்னகையுடன் விடையளித்தார். கடவுள் இருப்பதாக நம்பி தொழுபவர்கள் எல்லோருமே இவரைப் போலவே இருந்தால், உலகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கலவரங்கள் நிகழாது! வாழ்க நின் புகழ் .‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு ‘மடை திறந்த வெள்ளம் போல்’ காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார் ஆக்னஸ்.ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது.
குடும்ப வருமானம் : தன் கணவனின் இறப்பிற்கு பிறகு பெர்னாய் தனக்கு தெரிந்த மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு அலங்கார ஆடைத் தயாரித்து விற்று மற்றும் ஸ்கோப்ஜி நகரின் முக்கியமான பாதிரியார் ஜாம்பிரான் கோவ்க், பெர்னாயின் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து குழந்தைகளின் கல்விக்காக சில உதவிகளை செய்தார். தனது 12-ம் வயதில் தனது ‘சமூகச் சேவை’ செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். • ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்தல், • உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்தல், •பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு உதவி செய்தல், • தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல்,• மருத்துவ மனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு மருந்து போட்டு விடுதல், இதைப்பற்றி பள்ளிக்குச் செல்லும் முன் தன் தாயாரிடமும் பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியர்களிடமும், வீட்டுக்கு வருகின்ற வழியில் பேசுவார். இதைப்பற்றி பலரிடமும் விசாரிக்கும் போது ‘லொரெட்டோ சகோதரிகள்’ (Loreto Nuns) என்ற அமைப்பு இருப்பதை அறிந்தார். அவர்கள் மூலம் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ‘சமூக சேவை’ செய்வதை பற்றி அறிந்தார்.
உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.மார்ச் 13, 1997-ல் அறக்கட்டளையின் பொறுப்புக்கள் அனைத்தையும் நிர்மலாவிடம் ஒப்படைத்துவிட்டு சாதாரண தொண்டராகவே தனது பணியினை தொடர்ந்தார் அன்னை தெரசா. செப்டம்பர் 5, 1997-ம் ஆண்டு அதிகாலையிலேயே விழித்த அவர் ‘நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது’ என்று முனகியபடியே பேசினார். தெரசாவுக்குச் சிகிச்சை அளித்துவரும் சிறப்பு மருத்துவர் வந்து பார்த்தார். சிறதளவு முன்னேற்றம் ஆனாலும் பேசுமளவுக்கு கூட தெம்பில்லை. அன்று இரவு 9.30 மணிக்கு ‘நெஞ்சு வலிக்கிறதே’ என்று மெல்லிய குரலில் மீண்டும் முனகினார் தெரசா. “கடவுளே இவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பிராத்தித்தார்கள், பதறினார்கள்”. ஓசைகள் நின்று போய் படுத்திருந்தார். ஆத்மா சாந்தியடைந்தது.
இன்றும் அவர்களது சேவைகள் மற்றும் தொண்டுள்ளம் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுக் கொண்டு இருக்கிறது.கிடைத்த விருதுகள்: • 1962 – பத்ம ஸ்ரீ விருது, 1971 – 23வது போப் ஜான் அமைதி விருது,• 1971 – குட் சமரிட்டன் விருது,• 1971 – கென்னடி விருது,• 1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது,• 1973 – டெம் பிள்டன் விருது,• 1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்,• 1979 – அமைதிக்கான நோபல் பரிசு,• 1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்,• 1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது,• வயோதிகத்தால், அன்னையின் முகத்தில் குடிகொண்ட முக வரிகள், ஆதரவற்றவர்களின் முகவரிகளாக உள்ளன. ஏதோ ஒரு நோக்கத்திற்காக பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து முடிந்துவிடுகிற மனித வாழ்க்கையில், தொடக்கம் முதலே தொண்டுள்ளத்தையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து, மறைந்து, இன்று புனிதர் பட்டம் பெற்றாலும், பிறந்த நாள் முதலாய் இப்பூவுலகில் புனிதையாகவே வாழ்ந்துவந்த அன்னையின் ஆன்மா Missionaries of Charity-யில் தொடர்ந்து உலா வந்து கொண்டிருக்கிறது,


உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் தேவதையாக. இறுதிக் காலம் 1983-ம் ஆண்டு அன்னைக்கு முதல் மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ம் ஆண்டு மறுபடியும் மாரடைப்பு ஏற்பட ‘பேஸ் மேக்கர்’ பொருத்தினர். 1996-ம் ஏப்ரல் ஒரு நாள் கீழே தடுமாறி விழுந்த அன்னையின் காரை எலும்பு (காலர் போன்) முறிய 4 மாதங்கள் படுக்கையில் இருந்தார். மறுபடியும் இருதயம் பாதிக்கப்பட மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1997 – மார்ச் 13ந் தேதி தன் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய அன்னை சகோதரி நிர்மலாவை அப்பொறுப்பில் நியமித்தார். 1949-ம் ஆண்டிலிருந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்க்கை அர்ப்பணித்து ஓயாமல் உழைத்த அன்னை தெரசா அவர்கள் 1997 செப்டம்பர் 5-ந்தேதி நிரந்தரமாய் இறைவனின் பாதடியில் அமைதியானார். அவர் மறைந்ததை கேட்டு உலகமே கண்ணீர் விட்டு கதறியது. ஒவ்வொரு ஏழையையும் நேசித்த அன்னையின் மறைவு உலகையே திடுக்கிடத்தான் வைத்தது. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த 50க்கு மேற்பட்ட நாட்டு தலைவர்கள் இந்தியா வந்தனர்.
கட்சி வேறுபாடின்றி அன்னைக்கு அஞ்சலி செலுத்தினர். அவர் மறைந்தபோது உலகம் முழுவதும் 300 தொண்டு நிறுவனங்கள், சுமார் 6000 சகோதரிகள், 500 சகோதர பணியாளர்களையும் கொண்டு இயங்கியது. இவர்களைத் தவிர அன்னைக்காக 1 லட்சம் பேர்கள் சேவையால் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர். அன்னையின் சேவையை கௌரவிக்க 1984-ம் ஆண்டு “அன்னை தெரசா பல்கலைக்கழகம்” தமிழக அரசால் துவக்கப்பட்டது. அன்னையின் சேவையை கௌரவிக்க பல நாடுகள் ‘தபால் தலை ‘களை வெளியிட்டு சிறப்பித்தன. ‘அன்னை தெரசா இறைவனின் திருவருள் பெற்றவர்’ என்று வாடிகன் அவரை கௌரவித்தது. தனக்காக அல்லாமல் பிறர்க்காக வாழ்ந்த அன்னையின் மறைவுக்கு பின்னரும் உலகில் ஏழை மக்கள் இருக்கும்வரை துன்பப்படுவோர் வாழும்வரை அவரின் சேவை தொடர்ந்து கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *