• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஈரானில் ஹிஜாப் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பலி – வீடியோ

ByA.Tamilselvan

Sep 24, 2022

ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
மாஷா அமினி என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாததாக கூறி, அவரை கைது செய்து தாக்கியதில்பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு எதிராக நீதிகேட்டும் அரசின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும் ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை எரித்து, தலைமுடிகளை வெட்டி, வீதிகளில் களமிறங்கி இறங்கி பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை ஒடுக்கும் விதமாக காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அங்கு நடைபெறும் போராட்டம் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு செல்லாத வகையில், இணைய சேவைகளை முடக்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை தளர்த்தி எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ஈரானுக்கு இணைய சேவைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டு படுகாயம் அடையும் காணொலிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல்கள் ஒலித்து வருகின்றன.