• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இளந்திரை கொண்டான் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட நவீன ரைஸ் மில்(அரிசி ஆலை)…

ByKalamegam Viswanathan

Dec 2, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் நவீன ரைஸ் மில்(அரிசி ஆலை ) 30க்கும் மேற்பட்ட செயல்பட்டு வருகிறது.

இந்த அரிசி அனரக்கும் ரைஸ்மில்லில் 300-க்கும் மேற்பட்ட வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும், அவர்கள் வழியில் செல்லும் பெண்களை கையை பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இரவு 65 வயது கோமதியம்மாள் என்ற மூதாட்டியை 25 வயது மதிக்கத்தக்க பீகார் மாநிலத்தை சேர்ந்த சித்தேஸ் குமார் பாலியல் பலாத்கரத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் மூதாட்டி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ரைஸ் மில்களில் வட இந்திய தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது என இளந்திரரை கொண்டான் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒவ்வொரு ரைஸ்மில் முன்பும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட மாநில இளைஞர் சித்தேஷ் குமார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள ரைஸ் மில்களில் வட மாநில தொழிலாளர்களை முற்றிலுமாக அகற்றிவிட்டு, தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகளை பணியில் அமர்த்த வேண்டும் என கூறி, தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரிடம் வாக்குவாதம் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ரைஸ்மில் உரிமையாளர்கள் செவி சாய்க்கவில்லை என்றால் இளந்துறை கொண்டான் பஞ்சாயத்தில் இருந்து ரைஸ் மில்க் வழங்கப்பட்டுள்ள தொழில் வரி மற்றும் தொழில் நடத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.