• Thu. Jan 23rd, 2025

அடிப்படை வசதிகள் வேண்டும்… சாலை மறியல்..,

ByKalamegam Viswanathan

Dec 2, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்கா நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேட்டைப் பெருமாள் கோவில் வடபுறம் லீலாவதி நகர் முதல் நகராட்சி குப்பை கிடங்கு வரை சுமார் 600க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வேட்டை பெருமாள் கோவில் முதல் நகராட்சி குப்பை கிடங்கு வரை உள்ள சாலை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி ESI காலனி நெசவாளர்காலனி, இந்திராநகர் வன்னியர் காலனி, திருச்செந்தில் நகர், சஞ்சீவி நகர், ஆசிரம நகர், ஜோதிபாசு நகர் குடியிருப்பு வாசிகள் தார் சாலை மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி பொது மக்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார் மற்றும் ராமமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜா தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனா். பேச்சுவார்த்தையில் 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து தருவதாக அதிகாரிகள் கொடுத்த உறுதி படுத்திய பின் அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.