• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழா நடத்த கோரி, 100க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரிடம் மனு

ByKalamegam Viswanathan

Oct 5, 2024

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஆதிஅய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்து வந்த நிலையில், திருவிழாவில் மரியாதை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில வருடங்களாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினர் 100க்கும் மேற்பட்டோர் உடன் சேர்ந்து வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள ஆதி அய்யனார் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் மரியாதை செய்வது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுரேஷ் கண்ணன் என்பவர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இதில் கடந்த 2/9/2024 ஆம் தேதி படி எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை சேர்க்கப்படாத நிலையில் எங்களுடைய தரப்பு கருத்துகளையும் கேட்கப்படாத சூழ்நிலையில் தற்போது திருவிழா நடத்துவது சம்பந்தமாக தங்களுக்கு உயர் நீதிமன்றம் சிறப்பு உத்தரவு ஏதாவது பெறப்பட்டு உள்ளதா என்பதை தெரிவிக்கவும், மேலும் கோயில் சம்பந்தமாக சமாதானத்துக்காக அழைக்கப்பட்டவர்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் காலங்காலமாக திருவிழாவை நடத்தி வரும் நபர்களுக்கு சரியான கால அவகாசம் கொடுத்து பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது தொடர்ந்து எங்கள் கிராமத்தில் உள்ள மிகப் பெரும்பான்மை மக்களின் முதல் மரியாதை செய்கின்ற வழக்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் எங்களுக்கு இல்லை.

இத்தகைய சூழலில் சாமி கும்பிடுவது என்ற ஒற்றை இலக்கை முன்வைத்தே காலங்காலமாக திருவிழாவை நடத்தி வருகின்றோம். எங்களுடைய கிராம பெரும்பான்மையான மக்கள் பழைய நடைமுறையை கடைபிடிக்க விரும்புகிறோம். ஆகையால் தாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை கேட்டு திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.