40 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி, தமிழ் சினிமாவில், காதல் படங்கள் வரிசையில் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்தது மூன்றாம் பிறை!
பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த படத்துக்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார். இந்த படம் 1982ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாக பல திரையரங்குகளில் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் பாலு மகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறனும், திரைக்கதை எழுத்தாளர் அஜயன் பாலாவும் இணைந்து மூன்றாம் பிறை நினைவு மலர் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தனர். மேலும், இந்த படத்தை டிஜிட்டலைஸ் செய்து திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறதாம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.