

விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியா கதாப்பாத்திரத்தில் அப்பாவி மனைவியாக நடித்து வருகிறார் சுசித்ரா. மனைவியான பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை காதலித்து வருகிறார் கோபி.
ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். விவகாரம் பாக்கியாவிற்கு தெரியாமலேயே கோர்ட் வரை சென்று விட்டது. இதனால் பாக்கியாவை கோபி விவாகரத்து செய்து விடுவாரா என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது சீரியல். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சுசித்ரா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசித்ராவுக்கு பதில் வாணி ராணி , சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள ராதிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து பாக்கியா விலகுவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுசித்ராவுக்கு பதில் நடிக்கும் எவராக இருந்தாலும் அவர் அளவுக்கு அப்பாவியாக நடிப்பார்களா என்று கவலைப்பட்டுள்ளனர் ரசிகர்கள். இதற்கு கலர்ஸ் சேனல் ஒளிபரப்படும் சீரியல்கள் சார்பாகவும் சுசித்ராவிற்கு குரல் கொடுத்து வருகிறார்கள்!
