தமிழகத்தில் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் மாதந்தோறும் மின் கட்டண அளவீடு முறை அமல்படுத்தப்படும்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழத்தில் சொந்தமாக 6220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 நாட்கள் மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் மாதந்தோறும் மின் அளவீடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.