• Thu. Dec 4th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ByA.Tamilselvan

Aug 2, 2022

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவருக்கும் இதே பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் கடந்த 27-ந் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்தார். அவருக்கு லேசான காய்ச்சலும், கொப்பளங்களும் இருந்ததால் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதன் முடிவுகள் இன்று வந்தது. இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இவரையும் சேர்த்து கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.