• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அரியலூரில் ஆவின் பால் குளிரூட்டு நிலையம் திறப்பு விழா..,

ByT. Balasubramaniyam

Mar 15, 2026

அரியலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க வளாகத்தில் பின்பு புறம் ,புதிதாக ரூ.66.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட் டுள்ள ஆவின் பால் குளிரூட்டு நிலையம் திறந்து விழா நேற்று நடைபெற்றது.

சங்க வளாகத்தில் நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரியலுார் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆவீன் பால் குளிரூட்டு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் மணி,மதிமுக மாவட்ட செயலாளர் க. இராமநாதன், அரியலூர் நகர திமுக செயலாளர் இரா முருகேசன், நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், நகர்மன்ற துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி,அரியலூர் ஒன்றிய மதிமுக செயலாளர் கா.பி. சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.