தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.13 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்காக வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது தண்ணீரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் திறந்து வைத்தார். 7 பெரிய,7 சிறிய மதகுகள் வழியாக வைகை ஆற்றில் மொத்தம் வினாடிக்கு 2769 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வைகை நீர்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தண்ணீரை இந்த பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பி கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்தனர். நீர் திறப்பு நிகழ்ச்சியில் வைகை உதவி செய்ய பொறியாளர் முருகேசன் பொறியாளர்கள் குபேந்திரன் ஆனந்தன் உள்பட பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.