• Sun. Oct 13th, 2024

2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டி

ByA.Tamilselvan

May 22, 2022
பிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற இந்திய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்க்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ்.வெங்கட்ராமனின் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறுகையில் "நாட்டில் மொழியை பயன்படுத்தி ஒரு சர்சையை கிளப்பி உள்ளதாக பிரதமர் மோடி பேசி உள்ளார், இந்தியாவில் உள்ள எல்லா மொழியும் தேசிய மொழி தான் என பிரதமர் பேசி உள்ளார், அப்படியென்றால் அனைத்து மொழிகளையும் மத்திய அரசு தேசிய மொழியாக அறிவித்து அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க முடியுமா?, மத்திய அரசு அனைத்து மொழியும் சமம் என அறிவித்து விட்டு இந்தி மொழிக்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது, 2024 தேர்தலையோட்டி மத்திய அரசு மொழி கொள்கையை சர்ச்சையாக்க நினைக்கிறது, மத்திய அரசு கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது, வரி குறைப்பின் காரணமாக மக்களுக்கு நன்மை கிடைக்கும், கலால் வரியை குறைத்த மத்திய அரசு ஏன் செஸ் வரியை குறைக்கவில்லை, கலால் வரி குறைப்பால் மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்படும், 8 ஆண்டுகளில் செஸ் வரியால் மத்திய அரசுக்கு 28 இலட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது, பெட்ரோல், டீசல் விலையில் உள்ள செஸ் வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ் வரியை ரத்து செய்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையும், ஒரு ஆய்வில் தமிழகத்தில் குடும்ப வன்முறையால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தெரிகிறது. 
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பட்டினபிரவேஷம் தேவையில்லாத ஒன்று, ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தூக்க கூடாது, தமிழகத்தில் உள்ள பல ஆதீன மடங்கள் பட்டினபிரவேஷங்கள் கைவிடப்பட்டு உள்ளது, பட்டினபிரவேஷத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது, பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தங்களது நியாமான கோரிக்கையை முன் வைக்கிறது.நீண்ட காலமாக சிறையில் இருந்தவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என நாம் பேரறிவாளன் விடுதலையை பார்க்க வேண்டும். பேரறிவாளன் விடுதலையில் கொண்டாட வேண்டிய அவசியமில்லை, மாநில உரிமை சார்ந்த தீர்ப்பு என்பதால் இதனை நாம் கொண்டாடலாம், நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய பேரறிவாளன் தீர்ப்பு பயன்படும்" என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *