தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45) தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் .
இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மார்க்கையன்கோட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு ஆய்வுக்கு சென்றார்.

உப்புக்கோட்டை புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது எதிரே சின்னசாமி என்பவர் கார் ஓட்டி வந்து கொண்டிருந்தார் இப்போது தூக்க கழகத்தின் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிதி நிறுவன பணியாளர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல்துறையினர் கார் ஓட்டி வந்த சின்னச்சாமி மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



