• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

20 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கிய அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,

Byமுகமதி

Oct 19, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவ மனைகளில் இதுவரை பிறந்த 3583 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. என மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கடந்த செப்டம்பர் 28/09/26 அன்று தொடங்கி வைத்தார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 22. 6. 2026 அன்று முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 173 குழந்தைகளுக்கும், விராலிமலை வட்டாரத்திற்கு உட்பட்ட 283 குழந்தைகளுக்கும், ஆதனக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட 254 குழந்தைகளுக்கும், அரிமளம் வட்டாரத்துக்கு உட்பட்ட 136 குழந்தைகளுக்கும், பொன்னமராவதி வட்டாரத்துக்குட்பட்ட 224 குழந்தைகளுக்கு ம், அன்னவாசல் வட்டாரத்துக்குட்பட்ட 442 குழந்தைகளுக்கும், திருமயம் வட்டாரத்துக்கு உட்பட்ட 127 குழந்தைகளுக்கும், அண்டக்குளம் வட்டாரத்துக்குட்பட்ட 264 குழந்தைகளுக்கும், திருவரங்குளம் வட்டாரத்துக்குப்பட்ட 297 குழந்தைகளுக்கும், கறம்பக்குடி வட்டாரத்துக்குட்பட்ட 305 குழந்தை களுக்கும், கந்தவர்வகோட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட 185 குழந்தைகளுக்கும், மணமேல்குடி வட்டாரத்துக்குட்பட்ட 240 குழந்தைகளுக்கும், ஆவுடையார் கோவில் வட்டாரத்துக்குட்பட்ட 300 குழந்தைகளுக்கும், என 3230 குழந்தைகளுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட வட்டாரங்களில் தொடர்ந்து 30. 9.26 முதல் 15. 10. 2026 வரை பிறந்த 353 குழந்தைகளுக்கும் என மொத்தம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 3583 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு. அருணா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹேமசந்த் காந்தி, இணை இயக்குனர் (சுகாதாரம்) சரவணன், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பிரகாஷ், மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.ராஜ்மோகன், புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில் குமார், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிரசவித்த தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.