1998 பிப்ரவரி 14 அன்று, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவர்களின் வருகையின்போது கோவையில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் தமிழக வரலாற்றின் கரும்பக்கமாகும்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர்; சுமார் 250 பேர் காயமடைந்தனர். பல குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தன. பலர் வாழ்நாள் முழுவதும் பாதிப்புகளைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போதைய பரோல் விவரம்:
2026 அக்டோபர் 17 முதல், கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஐந்து பேருக்கு 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
- முகமது அன்சாரி (Mohammed Ansari)
- முகமது அலி (Mohammed Ali)
- மோனப்பா என்ற முகமது ஹசன் (Monappa alias Mohammed Hassan)
- முகமது அஜம் (Mohammed Ajam)
- நவாப் கான் (Nawab Khan)
பரோல் காலம்: 17.10.2026 முதல் 60 நாட்கள்.
இந்த ஐந்து பேரும் நிரந்தரமாக விடுதலை செய்யப்படவில்லை; பரோலில் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எங்களின் கேள்விகள்:
- 58 உயிர்களின் இழப்புக்கும், நூற்றுக்கணக்கான மக்களின் துயரத்துக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?
- இத்தகைய உணர்வுபூர்வமான வழக்குகளில், பொதுமக்களின் பாதுகாப்பும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளும் மதிக்கப்படுகின்றனவா இந்த அரசாங்கத்தால்?
- இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து, ஆதாரங்களைச் சேகரித்து, நீதிமன்ற நடைமுறைகளுக்காகப் பல ஆண்டுகள் உழைத்த காவல்துறையினரின் உழைப்பும் தியாகமும் மதிக்கப்பட வேண்டாமா?
பரோல் என்பது சட்டப்படி வழங்கப்படக்கூடிய ஒரு நடைமுறை என்பதை மறுக்கவில்லை. ஆனால், இத்தகைய கொடூரச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சட்ட நிபந்தனைகள் மிகுந்த கவனத்துடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வலியையும், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தையும் அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.
எங்களின் வலியுறுத்தல்:
பரோல் தொடர்பான அனைத்து சட்ட நிபந்தனைகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களின் நடமாட்டம் சட்டப்படி உரிய கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் இருக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கும் நீதிக்கும் அரசு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

திமுகவும் அதிமுகவும் செய்யாத தவறை தாவெக அரசு செய்கிறது என்ற அரசியல் விமர்சனத்தைவிட, மக்களின் பாதுகாப்பும் நீதியின் மீதான நம்பிக்கையும் முதன்மையானவை. அது கேள்விக்குறியாகிவிடக் கூடாது.
58 உயிர்களின் இழப்பை ஒருபோதும் மறக்க முடியாது.
பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடும், சட்டத்தின் ஆட்சியில் சமரசமற்ற அணுகுமுறையும் அவசியம்.
நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்: இஸ்லாமியர்களை இந்த அரசு ஒரு வயதுக் குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டாடும் அரசாக இருக்கிறது.
நான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவருமே அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கசப்பான உண்மை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
உங்களை யார் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக நீங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டுத் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர்களுக்கு அதிகச் சலுகைகளைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.
அது நிதியாக இருக்கட்டும், கல்வி நிறுவனங்களாக இருக்கட்டும், தனிப்பட்ட வக்ஃப் வாரியச் சொத்துகளுக்கு வழங்கப்படும் சலுகைகளாக இருக்கட்டும், அவர்களுக்கு வழங்கக்கூடிய கடன் உதவியாக இருக்கட்டும், அந்த மதத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவியாக இருக்கட்டும் — இவை அனைத்தையும் வாரி வழங்கக்கூடிய அரசாக இந்த அரசாங்கம் இருக்கிறது.
இதற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
நீங்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களாலும், அறியாத குழந்தைகளாலும் ஆட்சிக்கு வந்த நீங்கள், அனைத்து மக்களையும் பாதுகாக்கக்கூடிய இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
இப்போதுதான் புரிகிறது, இந்திய முஸ்லிம் லீக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்தக் கோரிக்கையின் அடிப்படையிலேயே உங்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்று!
கடும் கண்டனத்துடன்,
Kc. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர்
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி



