தமிழ்நாட்டில் ஊரக, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி, அக்டோபர் 9-ம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில், ‘9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுச்சேர்க்க நானும் உங்கள் பகுதிக்கு வருகை தரவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கெனவே, பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.