விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் வெங்கந்தூர், ஆசூர் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா 13.26 லட்சம் செலவில் மொத்தம் 27லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடைகள் திறப்பு விழா ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செஞ்சி.மஸ்தான் எம்.எல்.ஏ கலந்துகொண்டு நியாய விலை கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றி அங்கு நடைபெற்ற தொழிலாளர் நல வாரிய புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிய உறுப்பினர்களிடமிருந்து படிவத்தை பெற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.













; ?>)
; ?>)
; ?>)