• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ கருப்பையா ..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் 96 முகாம்களில் 7779 குழந்தைகளுக்கு கொடுத்திடதிட்டமிடப்பட்டுள்ளது. வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமினை கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் அஸ்வினி வட்டார சுகாதார மேற்பார் வையாளர் ரவிச்சந்திரன்,ஊட்டச்சத்து திட்ட அலுவலர் மகேஷ் பிரியா, சுகா தார ஆய்வாளர் பூபன்சக்கரவர்த்தி ,சமுதாய சுகாதார செவிலியர் கல்பனா ,பகுதி சுகாதார செவிலியர் முருகேஸ்வரி,கிராம சுகாதார செவிலியர் நர்மதா பானு,மற்றும் த.வெ.க.
ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு,வழக்கறிஞர் தியாகராஜன், பேரூர் செயலாளர் பசு மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.