

மாநில சுயாட்சி தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். தொடர் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று(ஏப்ரல் 15) மீண்டும் கூடியுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க, வலியுறுத்தும் வகையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்..,
தற்போதைய காலகட்டத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும்.
இதனை உணர்ந்தே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது.
மேலும் நாட்டின் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ந்து, இந்த உறவுகள் மேம்படுவதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

