கொளத்தூர், வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு ரூ. 19.56 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி, ஜம்புலிங்கம் பிரதான வீதியில் இருந்து குமாரப்பா சாலை வரை ரூ. 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் ஜி.கே.எம் காலனி 24ஆவது தெருவில் இருந்து பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை ரூ. 97 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்