• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மிஸ் யுனிவர்ஸ் … நம்ம இந்திய அழகியா..??

Byகாயத்ரி

Dec 13, 2021

அழகிகள் போட்டி என்றாலே அது மக்கள் மத்தியிலும் எல்லா நாடுகளுக்குள்ளும் ஒரு குதூகலம்.பட்டத்தை தட்டி செல்ல போவது யார் என்று திகில் கடைசி நிமிடம் வரை இருந்துகொண்டே இருக்கும். இந்த வரிசையில் இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற 70-வது மிஸ் யுனிவர்ஸுக்கான போட்டியில்,பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து “மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் வென்றுள்ளார். இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து தட்டிச் சென்றுள்ளார். இவர் ‘மிஸ் சண்டிகராக’கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும்,பல பட்டங்களையும் இந்தியாவில் இவர் வென்றுள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவின் லாரா தத்தா என்பவர் கடந்த 2000-த்தில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற நிலையில்,தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு இந்தியப் பெண்ணான ஹர்னாஸ் இப்பட்டத்தை வென்றுள்ளார்.கடந்த முறை மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெர்சியாவிடமிருந்து இப்பட்டத்தை ஹர்னாஸ் தட்டிச் சென்றுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸாக இந்தியாவிலிருந்து ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழத்தியுள்ளது.