142 நாடுகளில் உள்ள இன்டர்நேஷ்னல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட் , இந்திய மாநிலம் முழுவதும் உள்ள இந்தியன் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆகியவையோடு இணைந்து பத்தரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்புகாக செயலாற்றி வரும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், பத்திரிகையாளர்கள், அச்சு ஊடகங்கள்(பத்திரிகை),ஆன்லைன்மீடியா உள்ளிட்டவைகளில் பணியாற்றும் ஆசிரியர், துணை ஆசிரியர், நிருபர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களின் நலன்களிலும் அயராது செயலாற்றி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் சர்வதேச இந்திய மாநில அளவில் பத்திரிகையாளரின் நலன் மற்றும் பாதுகாப்பை குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி(vigilence)ரவி, கர்நாடக பத்திரிகையாளர் சங்க தலைவர் கே.ஆர்.நீலகண்டா, தமிழ் நல்லுரவு இயக்க தலைவர் கேஆர்கே, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக அழைத்து கருத்தரங்கு நடந்து முடிந்துள்ளது.சர்வதேச கருத்தரங்கில் இந்தியன் ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர், இன்டர்நேஷ்னல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட் தலைவர் சபிதா இந்தரஜித் ஆகியோர் கானொலி மூலம் கருத்தரங்கை சிறப்பித்தனர்.
தமிழ்நாடு ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் இணை செயலாளர் ஜெ.ஆர்.சுரேஷ் பிரிந்துரையின் பேரில் மற்ற நிர்வாகிகளின் ஒரு மித்த கருத்தோடு தலைவர் பா.சிவகுமார், பொதுசெயலாளர் கெ.கதிர்வேல் ஒப்புதலோடு தமிழ்நாடு ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் இணை செயலாளராக அரசியல் டுடே ஆன்லைன் மீடியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை ஆசிரியரான தா.பாக்கியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.