தென்காசியில் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தை பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
தென்காசியில் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரபதிவுத்துறை அலுவலகம் கட்டுப்பட்டுள்ளது. இதனை பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜா, மாவட்டம் செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
பத்திரப்பதிவு துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை இந்த ஆட்சியில் கொண்டு வந்துள்ளதாகவும், பத்திரப்பதிவு துறையில் 6 மாத காலத்தில் சுமார் 2000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டபட்டுள்ளதாகவும், அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலும் போலியாக பத்திர மோசடியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்படும் என்ன தெரிவித்தார்.
அப்போது தென்காசி நகர செயலாளர் சாதீர், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, அன்பழகன்,மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ரசாக், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக் முகம்மது, முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.