இந்திய கம்யூனிஸ்ட் எம்எல் கட்சியின் சார்பாக ஆண்டிபட்டி தாலுகா பகுதிகளில் பஞ்சமர் மற்றும் பூமிதான நிலங்களை மீட்க வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் அருகில் இந்திய கம்யூனிஸ்ட எம்எல் கட்சி ஆண்டிபட்டி தாலுகா சார்பாக போடிதாசன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மணியகாரன்பட்டி பகுதியில் வசித்து வரும் 1000த்திற்கும் மேற்ப்ட வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா பஞ்சமர் மற்றும் பூமிதான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால் ஆண்டிபட்டி முருகன் தியேட்டருக்கு அருகில் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல் கட்சியின் சார்பாக வீட்டுமனை பட்டா வழங்ககோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாநில செயலாளர் நடராஜ் சிறப்புரை ஆற்றினார்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆர்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.