• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு-வை சென்னையில் முகாம் அலுவலகத்தில் சந்தித்த, எம்.பி ஆ.இராசா.

ByT.Vasanthkumar

Feb 22, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் – காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்து, ஆ.இராசா.எம்பி., நன்றி தெரிவித்தார்! மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உடன் இருந்தனர்!

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் தட்டுப்பாடு நீண்ட காலமாக இருந்து வந்தது. கடந்த 1996-2001 -ஆம் ஆண்டுகளில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த ஆ.இராசா பரிந்துரையை ஏற்று, பெரம்பலூர் மாவட்டத்திற்கு கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் (1996-2001) அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் காவேரி – கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.120 கோடியில் அறிவிக்கப்பட்டு, கொள்ளிடத்தில் இருந்து தண்டாரக்கோறை எனுமிடத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு பூவாளூர், தச்சங்குறிச்சி, சிறுகனூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வந்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. தற்போதைய கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையின் வளர்ச்சி அதிக மடைந்துள்ளதால், குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டும், மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி.யின் கோரிக்கையை வைத்ததை முன்னிட்டும், பெரம்பலூர் நகராட்சிக்கும் , எறையூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட்களுக்கும் சேர்த்து ரூ.366 கோடியில் கொள்ளிடம் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ,கே.என்.நேருவை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி., சந்தித்து
நன்றி தெரிவித்தார். உடன் பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.