தமிழக மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியல் மாற்றப்பட்டுள்ளார். மேலும் இதுபற்றி விளக்கம் அளித்த மாணவர்கள் சமஸ்கிருதத்தில் நாங்கள் உறுதிமொழி ஏற்க வில்லை என்றும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியைத்தான் தாங்கள் எடுத்து கொண்டோம் என்றும் கூறினர்.
சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்ற சர்ச்சை விவகாரம், மருத்துவ கழிவுகளை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி இன்று பிற்பகல் தமிழ்நாட்டில் உள்ள 97 மருத்துவ கல்லூரி டீன்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் உரிய விதிமுறைகள் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி இன்று மதியம் ஒரு மணிக்கு ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.